'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! | சல்மான்கான் சொன்ன கதைக்கு மறுப்பு தெரிவித்து ஏ.ஆர். முருகதாஸ்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தின் புதிய அப்டேட்! | பாவனாவின் வருஷம் 14! | முதல் பாகத்தில் இறந்தேன்.. 2ம் பாகத்தில் நடித்துள்ளேன் ; எம்புரான் நடிகர் வைக்கும் டுவிஸ்ட் | 15 கோடி கேட்கும் ரவுடி பேபி | ‛கட் அண்டு ரைட்'டாக பேசும் நடிகை | 'இன்ஸ்டன்ட் ஹிட்' ஆன 'ரெட்ரோ' கனிமா….. | 'மதராஸி' படப்பிடிப்பு எப்போது முடியும்? |
ஒரு பக்கம் கன்னட மக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தாலும் ஹிந்தித் திரையுலகின் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
அவர் நாயகியாக நடித்து சமீபத்தில் வெளிவந்த 'சாவா' படம் 500 கோடி நிகர வசூலைக் கடந்து சில பல சாதனைகளைப் படைத்துள்ளது. அதற்கு முன்பு கடந்த வருடம் அவர் நடித்த தெலுங்குப் படமான 'புஷ்பா 2' ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியானது. ஹிந்தியில் மட்டுமே அந்தப் படம் 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதற்கு முன்னதாக அவர் ஹிந்தியில் நடித்த 'அனிமல்' படம் 500 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது.
இப்படி தொடர்ச்சியாக 500 கோடி ஹாட்ரிக் வசூலைக் கொடுத்து பாலிவுட்டின் டாப் ஸ்டார் ஆக உயர்ந்து வருகிறார் ரஷ்மிகா. இந்த மாதம் சல்மான் கான் ஜோடியாக அவர் நடித்துள்ள 'சிக்கந்தர்' படம் வெளியாக உள்ளது. இந்தப் படமும் 500 கோடி வசூலைக் கடந்தால் ஹிந்தி நடிகைகளை விட முன்னேறிச் சென்றுவிடுவார் ரஷ்மிகா.