என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சினிமாவில் நடன இயக்குநராக பணிபுரிந்த வந்தவர் சுஜாதா. 'ஈசன்' படத்தில் ஹிட்டான 'ஜில்லா விட்டு ஜில்லா' பாடலில் நடனமாடி மிகவும் பிரபலமடைந்த இவர் சினிமாவிலேயே சிறு சிறு ரோல்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கில்லி படத்தில் திரிஷாவுக்கு அம்மாவாக நடித்திருந்தவர் இவர் தான். தற்போது சீரியல்களில் நடித்து வரும் இவருக்கு மக்கள் மத்தியில் மிக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டியில் தனது சின்னத்திரை எண்ட்ரி குறித்து பேசியிருக்கிறார். அதில், ''கில்லி படத்தில் நடிக்கும் போது முதலில் கஷ்டப்பட்டேன். அதன்பிறகு இயக்குநர் எந்த கேரக்டரில் நடிக்கிறோமோ அந்த கேரக்டராகவே மாறிவிட வேண்டும் என்று சொன்னார். அதைத்தான் இப்போது சிறகடிக்க ஆசை தொடரிலும் செய்கிறேன். இந்த சீரியலில் நடிக்க தொடங்கிய போது என் பழைய நண்பர்கள் போன் வாழ்த்துகள் கூறினர். அது எனக்கு மனநிறைவை தருகிறது.
சமீபத்தில் ஒருவரின் மரணத்திற்கு சென்றிருந்தேன். அங்கிருந்த ஒருவர் என்னை சிறகடிக்க ஆசை சிந்தாமணி தானே? என அடையாளம் கண்டுகொண்டார். சிந்தாமணி கேரக்டர் கொஞ்சநாளிலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு காரணம் இயக்குநர் தான். வில்லியாக நடிப்பதால் சிலர் என்னை திட்டுவார்கள். சீரியலோ, சினிமாவோ கதாநாயகன், நாயகிக்கு பிறகு மக்களிடம் அதிகம் ரீச்சாவது வில்லன்கள் தான். அதனால் வில்லியாக நடிப்பது எனக்கு ஹேப்பி தான்'' என அந்த பேட்டியில் சுஜாதா பேசியுள்ளார்.