பொங்கல் போட்டியில் விலகிய 'திரௌபதி 2, ஜாக்கி' | ஜனநாயகன் தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும் : நடிகர் கார்த்தி | ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல் | பிளாஷ்பேக்: நடிகர் முத்துராமனின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாய் அமைந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” | தெலுங்கில் குத்தாட்டம் போட்ட சான்வி மேக்னா | 'தெறி' ரீரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு | ராமராஜனை சந்தித்த நடிகை கனகா | தாய் கிழவி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஜியோ ஹாட்ஸ்டார் | 'ஜனநாயகன்' வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஜன.15ல் விசாரணை? | பராசக்தி படத்திற்கு இப்படி வாழ்த்தினார் ரஜினி : சிவகார்த்திகேயன் |

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவாங்கி, அதன்பிறகு விஜய் டிவியிலேயே பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், போட்டியாளராகவும் கலந்து கொண்டார். தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. இதன் மூலம் சினிமா வாய்ப்புகள் பெற்ற ஷிவாங்கி, இதுவரை 'டான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், காசே தான் கடவுளடா' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது முழுக்க முழுக்க சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஷிவாங்கி அண்மையில் பேட்டி ஒன்றில் தனது காதல் தோல்வி குறித்து கூறியுள்ளார்.
அதில், ''நான் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தது உண்மை தான். ஆனால், ப்ரேக்கப் ஆகிவிட்டது. அதனால் மிகவும் வலியை அனுபவித்தேன். இப்போது நான் சிங்கிளாக தான் இருக்கிறேன். என்னை நானே பார்த்துகொள்ள கற்றுக்கொண்டேன். அழகான ஆண்கள் ஊர் முழுக்க இருப்பார்கள். நமக்கு அவர்களை பிடிக்கும். ஆனால், அவர்களுக்கும் நம்மை பிடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பெண்கள் காதலை சொல்வதைவிட ஆண்கள் காதலை சொன்னால் தான் சரியாக இருக்கும்'' என்று கூறியுள்ளார்.