மீண்டும் கைகோர்க்கும் 'பேட்ட' கூட்டணி | ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படப்பிடிப்பு நிறைவடைந்தது | ஓடிடி-யில் கலக்கும் ஜி.வி பிரகாஷ் குமாரின் 'கிங்ஸ்டன்' | பூரி ஜெகன்நாத் உடன் இணைவது குறித்து விஜய் சேதுபதி | கிரிக்கெட் வீரராக களமிறங்கும் ஆதி | 'ஆர்ஆர்ஆர்' டிரைலரை முந்திய 'ஹிட் 3' | பிளாஷ்பேக்: காட்சியை தத்ரூபமாக்க, கழுதைகளை கொண்டுவரச் செய்து, படப்பிடிப்பு நடத்திய 'மாடர்ன் தியேட்டர்ஸ்' அதிபர் டி ஆர் சுந்தரம் | இளையராஜா நோட்டீஸ்: இன்று பதில் கிடைக்குமா ? | அஜித்தின் அடுத்த படமும் தெலுங்கு நிறுவனத்திற்கே..?? | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் மூன்று ஹீரோயின்கள்? |
நடிகர் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நேற்று ஸ்ருதிஹாசன் தன்னுடைய 39வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
'கூலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்து நாட்டில் நடந்து வருகிறது. அதனால், அங்கு படப்பிடிப்பு குழுவினருடன் பிறந்தநாளைக் கொண்டாடிய ஸ்ருதி தனது நண்பர்களுக்காக பார்ட்டியும் வைத்துள்ளார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
“2025ம் ஆண்டு ஒரு மாயாஜால ஆண்டு. ஜனவரி மாதக் குழந்தையாக நான் என் ஆண்டை கொண்டாட்டத்துடனும் மகிழ்ச்சியுடனும் தொடங்குகிறேன். அதை நான் ஒரு போதும் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. அன்புடனும் நல்வாழ்த்துக்களுடனும் என்னைச் சூழ்ந்துள்ள அனைத்து அழகான மக்களுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன்.
இந்த ஆண்டு இதுவரை இல்லாத இனிமையான மனிதர்களைக் கொண்ட அற்புதமான 'கூலி' குழுவுடன் கொண்டாடுவது கூடுதல் சிறப்பு. இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகு பிறந்தநாள் விழாவை நடத்தியது, பல அழகான உள்ளங்களுடன் கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
எல்லா ஏற்றத் தாழ்வுகளிலும் என்னுடன் பயணிக்கும் மற்றும் அனைத்து வேலை நாட்களிலும் சிறந்த ஆதரவாக இருக்கும் எனது நம்ப முடியாத குழுவிற்கு நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.