பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை |

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக இருப்பவர் வினோதினி. சமீபத்தில் வந்த 'காதலிக்க நேரமில்லை' படத்தில் நித்யா மேனனின் சித்தியாக நடித்திருப்பார். ஒன்றைரை வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அதற்குள்ளாக கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவில் தங்கியிருக்கிறார். அவர் எப்போது திரும்புவார் என்பது கூட தெரியவில்லை. 'ஏஐ' பற்றி தெரிந்து கொள்ள அவர் அமெரிக்காவில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். அங்கிருந்து அவ்வப்போது எக்ஸ் தளத்தில் மட்டுமே சில பதிவுகளைப் போட்டு வருகிறார். கட்சி ஆரம்பித்ததில் இருந்தே கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் மட்டுமே அரசியல் நடத்துவதாக பேச்சு இருக்கிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் கோவையில் போட்டியிட்டு தோற்றார். கடந்த பார்லிமென்ட் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். ராஜ்யசபா எம்பி பதவி ஒன்று அவருக்கு வழங்கப்படும் என்று பேசப்பட்டது.
கட்சியை விட்டு விலகும் வினோதினி நீண்ட பதிவொன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “தொடர்ந்து என் எண்ணமும் சிந்தனையும் தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தியே இருக்கும். ஏனெனில், நான் பிறந்த இம்மண்ணுக்கு என் மக்களுக்கு என்னால் ஆன சிறு மாற்றத்தையாவது, குறைந்தபட்சம் சிந்தனையளிவிலாவது, இப்பிறவியில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.