பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி |

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து ‛எமர்ஜென்சி' என்ற படத்தை இயக்கி, அவரது வேடத்தில் நடித்துள்ளார் கங்கனா. கடந்தாண்டே வெளியாக வேண்டிய படம். ஆனால் சென்சார் உள்ளிட்ட பல தடைகளை கடந்து இப்படம் ஜன., 17ல் வெளியானது. அதேசமயம் பஞ்சாப் மாநிலத்தில் இப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பால் பல இடங்களில் படம் வெளியாகவில்லை, தடை விதிக்கப்பட்டுள்ளது. சீக்கியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பஞ்சாபில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது பற்றி கங்கனா வெளியிட்ட பதிவில், ‛‛இது சினிமா கலைஞர்களை துன்புறுத்தும் செயல். எல்லா மதத்தினர் மீதும் எனக்கு மரியாதை உள்ளது. நான் சண்டிகரில் வளர்ந்ததால் சீக்கிய மதத்தை அருகில் இருந்து கவனித்து, பின்பற்றி வந்துள்ளேன். எனது நற்பெயர் மற்றும் எனது படத்தை களங்கப்படுத்த நடக்கும் பொய் பிரச்சாரம்'' என குறிப்பிட்டுள்ளார்.