மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் |
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தற்போது 'எமர்ஜென்சி' என்ற படத்தை தயாரித்து, இயக்கி நடித்துள்ளார். இந்த படம் இந்திரா பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சியை (அவசரநிலை பிரகடனம்) மையமாக கொண்டு உருவாகி உள்ளது. இதில் இந்திராவாக கங்கனா நடித்துள்ளார். இந்த படம் இந்திராவை சர்வாதிகாரியாக சித்தரிப்பதாகவும், படத்தில் இந்திரா பற்றி தவறாக சித்தரித்திருந்தால் படம் வெளியாகும் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் படம் வருகிற 17ம் தேதி வெளியாகும் என்று கங்கனா அறிவித்துள்ளார். காங்கிரஸ்காரர்களை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் இறங்கி உள்ளார். முன்பு இந்திரா பற்றி கடுமையாக விமர்சித்து வந்த கங்கனா இப்போது அவரது புகழ்பாட தொடங்கி உள்ளார். அதோடு படத்தை பார்க்க வருமாறு காங்கிரசாருக்கும் குறிப்பாக பிரியங்காவுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எமர்ஜென்சி திரைப்படத்தைக் காண காங்கிரஸ் எம்.பி பிரியங்காவுக்கு நான் அழைப்பு விடுத்தேன். பார்லிமென்டில் நான் பிரியங்காவை சந்தித்தேன். அப்போது முதலில் நான் அவரிடம் சொன்னது, நீங்கள் 'எமர்ஜென்சி' படத்தை பார்க்க வேண்டும் என்று தெரிவித்தேன். அதற்கு அவர் மிகவும் கனிவுடன் 'நிச்சயம், பார்க்கலாம்' என்றார். மீண்டும் நான் நிச்சயம் அது உங்களுக்கு பிடிக்கும் என்று கூறினேன்.
இந்திராவை திரையில் கண்ணியமாக சித்தரிப்பதில் நான் அதிக கவனத்துடன் இருந்தேன். ஏனெனில் இந்திராவும் மிகவும் விரும்பப்படும் தலைவர். எமர்ஜென்சியின் போது நடந்த சில விஷயங்கள் தவிர, அவர் மிகவும் நேசிக்கப்பட்டார். மக்களால் மிகவும் கொண்டாடப்பட்டார். மூன்று முறை பிரதமராக இருப்பது சாதாரணம் அல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.