'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாலிவுட் நடிகர் அமீர் கானின் மகன் ஜூனைத் கான் தற்போது லவ் டூடே படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'லவ்யப்பா' எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அத்வைத் சன்தன் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் இளைய மகள் குஷி கபூர் நடித்துள்ளார்.
இந்த படத்தை பார்த்த அமீர்கான் கூறியதாவது, "எனக்கு லவ்யப்பா படம் மிகவும் பிடித்திருந்தது. மொபைல் போன்களால் இன்று நம் வாழ்க்கை மாறிய விதம் பற்றி நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நான் ஸ்ரீதேவியின் மிகப்பெரிய ரசிகன். இந்த படத்தின் மூலம் ஸ்ரீதேவியை குஷி கபூரிடம் பார்த்தேன்" என தெரிவித்தார்.