சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பாலிவுட்டில் இருந்து தென்னிந்திய சினிமாவுக்கு வந்தவர் வாமிகா கபி. தமிழில் 'மாலை நேரத்து மயக்கம், இரவாக்காலம்' படங்களில் நடித்தார். தற்போது 'ஜீனி' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் பான் இந்தியா படமாக தயாராகி வரும் 'ஜி2' படத்தில் ரகசிய உளவு பிரிவு ஏஜெண்டாக நடிக்கிறார். ஆதவ் சேஷ் படத்தின் நாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக இம்ரான் ஹாஷ்மி நடிக்கிறார்.
இவர்கள் தவிர, முரளி ஷர்மா, சுப்ரியா யர்லகட்டா மற்றும் மது ஷாலினி உட்பட பலர் நடிக்கின்றனர். பீப்பிள் மீடியா பேக்டரி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் - மற்றும் ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் சார்பில் டி ஜி விஸ்வ பிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார்கள்.
படத்தில் நடிப்பது பற்றி வாமிகா கபி கூறும்போது “இந்த படத்தில் நான் 'உளவு ஏஜெண்ட் 116' என்ற கேரக்டரில் நடிக்கிறேன். ஐரோப்பிய நாட்டில் இந்தியாவுக்கு எதிராக நடக்கும் சதியை முறியடிப்பது மாதிரியான கதை. 'ஜி 2' எனும் அற்புதமான திரை அனுபவத்தின், நம்பமுடியாத பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த ஸ்பை உலகில் அடியெடுத்து வைத்தது சிலிர்ப்பான மற்றும் சவாலான அனுபவமாக இருந்தது. மிகத் திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணிபுரிவது, என் கதாபாத்திரத்திற்கு புதிய ஆற்றலைக் கொண்டுவர எனக்குப் பேருதவியாக அமைந்தது” என்றார்.