காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
நம்மூரில் நடக்கும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி போன்று மும்பையில் ‛மலாட் மஸ்தி' நிகழ்ச்சி பிரபலம். இசை, பாட்டு, ஆட்டம் என பலரும் பங்கேற்று மகிழ்வர். இந்தாண்டு மும்பையில் நடந்த மலாட் மஸ்தி 2025 நிகழ்ச்சியை எம்எல்ஏ அஸ்லம் ஷேக் ஏற்பாடு செய்தார். இதில் நடிகர்கள் சோனு சூட், ஜாக்குலின் பெர்ணான்டஸ், ரஷா ததானி, அமன் தேவ்கன் போன்ற பிரபலங்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய சோனு சூட், ‛‛மிகவும் சிறப்பான நாள். எங்களின் பதே படம் ஜன., 10ல் ரிலீஸாகிறது. முதல்முறையாக நான் படத்தை இயக்கி உள்ளதால் இன்னும் சிறப்பானது. ஜாக்குலின் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் இயக்குனராக பணிபுரிவது மகிழ்ச்சியாக இருந்தது. எதற்கு ஹாலிவுட் போன்ற படத்தை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கூறுவார்கள். அப்படியொரு படம் எடுப்போம் என்றேன். இப்போது இந்த படத்தை பார்த்துவிட்டு ஹாலிவுட்காரர்கள் ஏன் இதுபோன்ற படத்தை எடுக்க கூடாது என நினைப்பார்கள்'' என்றார்.
ஜாக்குலின் கூறுகையில், ‛‛முதல்முறையாக மலாட் மஸ்தியில் பங்கேற்கிறேன். ஜன.,10ல் திரையரங்குகளில் எங்கள் பதே படம் வருகிறது. நீங்கள் ரசிப்பீர்கள்'' என்றார்.
ராஷா கூறுகையில், ‛‛நான் இங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களது ஆசாத் திரைப்படம் ஜனவரி 17 அன்று வெளியாகவுள்ளது. நீங்கள் அனைவரும் எங்கள் படத்தை தியேட்டரில் பாருங்கள்” என்றார்.
அஜய் தேவ்கனின் மருமகன் அமன் தேவ்கனும், ரவீனா டாண்டனின் மகள் ரஷா ததானியும் ஆசாத் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.