சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தொகுப்பாளினியான ஜாக்குலின் சினிமா, சீரியல் என நடிகை அவதாரம் எடுத்தார். ஆனால், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், அண்மையில் நிறைவுற்ற பிக்பாஸ் சீசன் 8 -ல் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வந்த ஜாக்குலின் மக்களின் பேராதரவை பெற்றிருந்தார். இருப்பினும் கடைசி வாரத்தில் எலிமினேட் ஆகி வெளியேறினார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வரும் அவரிடம், ரசிகர் ஒருவர் 'நீ லெஸ்பியனா?' என்ற கேள்வியை முன் வைத்தார். அதற்கு பதிலளித்த ஜாக்குலின் 'இப்போதெல்லாம் பெண்கள் சேர்ந்து புகைப்படம் போட்டாலே அப்படி தான் சொல்கிறார்கள். இவர்கள் இப்படிதான் யோசிப்பார்களா? பைத்தியமா இவர்கள் என நினைக்க தோன்றுகிறது' என பதிலளித்துள்ளார்.