செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
கடந்தாண்டு நவம்பர் மாதம் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் 29 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிந்து வாழப்போவதாக அறிவித்தார்கள். இந்த செய்தி ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அவர்களை சேர்ந்து வாழுமாறு கோரிக்கை வைத்தார்கள்.
இந்நிலையில் தற்போது சாய்ரா பானு தனது வழக்கறிஞர் வந்தனா ஷா என்பவர் மூலமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சமீபத்தில் தனக்கு அமெரிக்க மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு ஆதரவாக இருந்ததை தெரிவித்து அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் சாய்ரா பானு. அவர் மட்டுமின்றி, ஆஸ்கர் விருது பெற்ற ஒளி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, அவரது மனைவி ஷாதியா மற்றும் தனது சட்ட ஆலோசகர் வந்தனா ஷா ஆகியோரும், தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலகட்டத்தில் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் சாய்ரா பானு.