4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் |

தற்போது கிரீஸ் இயக்கத்தில் 'காதி' என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் அனுஷ்கா. கிரைம் திரில்லர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஒரு கஞ்சா வியாபாரி வேடத்தில் நடித்துள்ளார் அனுஷ்கா. இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா, ஒடிசா எல்லைப் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில், ஏப்ரல் 18ம் தேதி உலகம் எங்கும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு செய்தியில், இந்த காதி படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக இரண்டு தியேட்டர் டிரைலர்களை வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. மார்ச் மாதத்தில் முதல் டிரைலரும், படத்தின் ரிலீஸ்க்கு முன்பு இரண்டாவது டிரைலரையும் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.




