மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
தமிழகத்தில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களிலும் வழங்கப்படும் சினிமா டிக்கெட் கட்டணங்களில் இரட்டை வரி விதிக்கப்படுகிறது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரி என சேர்த்தே கட்டணம் அமைந்துள்ளது.
உதாரணமாக, சென்னையில் உள்ள பிரபலமான தியேட்டர் ஒன்றில் உள்ள டிக்கெட் கட்டணம் ரூ.180. அதில் மாநில அரசால் விதிக்கப்படும் கேளிக்கை வரி ரூ.10, மத்திய அரசுக்கான ஜிஎஸ்டி வரி 9 சதவீதம், மாநில அரசுக்கான ஜிஎஸ்டி வரி 9 சதவீதம், தியேட்டர் பராமரிப்பு கட்டணம் ரூ.6 என சேர்த்து மொத்தமாக ரூ.180 கட்டணமாக வாங்கப்படுகிறது.
கேளிக்கை வரிக்கான தொகை, மாநில அரசுக்கான ஜிஎஸ்டி தொகை என இரட்டை வரிகள் மூலம் கிடைக்கும் தொகை மாநில அரசுக்கு சேருகிறது. இந்த இரட்டை வரி விதிப்பை விலக்க வேண்டும் என இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் முந்தைய ஆட்சியில் திரையுலகினர் ஸ்டிரைக் கூட நடந்தது. ஆனாலும், இப்போது வரை அந்த இரட்டை வரி நீக்கப்படவில்லை. இதில் ஜிஎஸ்டியை நீக்க வாய்ப்பில்லை. கேளிக்கை வரியை மாநில அரசு நினைத்தால் நீக்கலாம்.
இந்நிலையில் இன்று சென்னையில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு கருத்தரங்கம் நடந்தது. அதில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் இரட்டை வரி முறையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முதல்வரிடம் நிச்சயம் பேசுவேன் என்றும், விரைவில் மகிழ்ச்சியான அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்றும் கமல்ஹாசன் கோரிக்கைக்கு பதிலளித்தார்.