‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி | 'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு | பிளாஷ்பேக்: ஹீரோக்கள் ஆதிக்கத்தை வென்ற மாதுரி தேவி |
'எந்திரன்' படத்தின் கதைத் திருட்டு விவகாரத்தில் அதன் இயக்குனர் ஷங்கர் சொத்துக்களை அமலாக்கத் துறை நேற்று முடக்கியது. சுமார் 10 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை, பிஎம்எல்ஏ (PMLA) விதிகளின் படி 17 பிப்ரவரி அன்று சென்னை, அமலாக்கத்துறை முடக்கியதாக நேற்று எக்ஸ் தளத்திலும் பதிவிட்டிருந்தார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஷங்கரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கிய விவகாரம் இந்தியத் திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து இயக்குனர் ஷங்கர் தற்போது விளக்கமளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது: அசையா சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக அமலாக்கத்துறையிடம் இருந்து தகவல் இல்லை. எந்திரன் படம் தொடர்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டு அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அமலாக்கத்துறையின் தொடர் நடவடிக்கையால் மிகவும் வருத்தமடைகிறேன். குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்றம் முழுமையாக விசாரித்து தீர்ப்பளித்தது. இரு தரப்பு ஆதாரங்கள், வாதங்களை ஆராய்ந்து ஆரூர் தமிழ்நாடன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதிமன்ற தீர்ப்பை நம்பாமல் வெறும் புகார் அடிப்படையில் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அமலாக்கத்துறையின் நடவடிக்கை சட்ட செயல்முறையின் அப்பட்டமான துஷ்பிரயோகத்தை குறிக்கிறது. அதிகாரிகள் தங்களது நடவடிக்கையை மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புகிறேன். மறுபரிசீலனை செயயவில்லை என்றால் அமலாக்கத்துறை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.