தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடித்த இறைவன், சைரன், பிரதர் போன்ற படங்கள் தோல்வியை தழுவின. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் காதலிக்க நேரமில்லை என்ற படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவி , அடுத்தபடியாக டாடா பட இயக்குனர் கணேஷ் பாபு இயக்கும் படத்தில் தான் நடிக்கப் போவதாக தெரிவித்தார். அவர் இயக்கிய டாடா படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் இயக்கத்தில் உருவாகும் என்னுடைய 34வது படம் அரசியல் கதையில் உருவாகிறது. வெகுஜன மக்களை கவரக்கூடிய படமாக அது இருக்கும் என்கிறார் ஜெயம் ரவி.