என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

'கல்கி' படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் தற்போது மூன்று, நான்கு படங்கள் அடுத்தடுத்து படப்பிடிப்பில் இருக்கின்றன. அவற்றில் 'ஸ்பிரிட்' மற்றும் 'ராஜா சாப்' ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. இதில் 'ராஜா சாப்' படத்தை இயக்குனர் மாருதி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். சமீப வருடங்களாகவே பிரபாஸ் நடிக்கும் படங்களுக்கு வெளிநாடுகளில் அதுவும் குறிப்பாக ஜப்பானில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த மாதம் பிரபாஸ் நடித்த கல்கி திரைப்படம் ஜப்பானில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
ஜப்பான் ரசிகர்களுடன் அவர் இணைந்து படம் பார்ப்பதாக இருந்த நிலையில் அவர் நடித்து வந்த ராஜா சாப் படப்பிடிப்பில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் சொந்த ஊர் திரும்பினார். இதற்காக ஜப்பான் ரசிகர்களிடம் வருத்தமும் தெரிவித்து இருந்தார். இப்படி ஜப்பான் ரசிகர்கள் பிரபாஸ் மீது அன்பு காட்டுவதால் அதற்கு பிரதிபலனாகவும் மேலும் வியாபார யுக்தியாகவும் இந்த ராஜா சாப் படத்தில் ஜப்பான் வெர்ஷனுக்கு என்றே ஒரு பாடலை இசையமைப்பாளர் தமன் உருவாக்கி உள்ளாராம். அது மட்டும் அல்ல படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜப்பானிலும் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். இந்த தகவலை தற்போது இசையமைப்பாளர் தமன் கூறியுள்ளார்.