பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தற்போது 'கண்ணப்பா' என்கிற புராண படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மிகுந்த பொருட்செலவில் தயாராகும் இந்த படத்தை நடிகர் மோகன்பாபு தயாரித்து வருகிறார். முகேஷ் குமார் சிங் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தை பான் இந்தியா லெவலில் வெளியிடும் விதமாக மலையாளத்திலிருந்து மோகன்லால், ஹிந்தியில் இருந்து அக்ஷய் குமார், தெலுங்கில் இருந்து பிரபாஸ், கன்னடத்தில் இருந்து சிவராஜ் குமார் என மொழிக்கு ஒரு பிரபலமாக இந்த படத்தில் ஆளுக்கு ஒரு முக்கிய கதாபாத்திரங்களை கொடுத்து உள்ளே அழைத்து வந்துள்ளனர்.
அந்த வகையில் மோகன்லால் இந்த படத்தில் கிராதா என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படக்குழுவினர் மோகன்லாலின் வித்தியாசமான தோற்றத்துடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர். அதில் “பாசுபதாஸ்திரத்தின் ஏகாதிபதி.. வெற்றி பெற்றவர்களை வென்றவர்.. காடுகளின் வீரமிக்க கிராதா” என்று அவரைப் பற்றிய ஒரு மாஸான அறிமுகமும் கொடுத்துள்ளனர். இந்த போஸ்டரை பார்க்கும்போது மோகன்லால் இதுவரை நடித்த படங்கள் எதிலும் இதுபோன்ற ஒரு தோற்றத்தில் நடித்ததில்லை என்பதை எளிதாக உணர முடிகிறது.