வேட்டையன் படத்திற்கு கள்ளிப்பால் - இயக்குனர் வேதனை | பிரபாஸ் படத்தில் நடனமாடும் நயன்தாரா? | அனுஷ்கா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புஷ்பா பட இயக்குனருடன் இணையும் ராம்சரண் | அல்லு அர்ஜுனின் மனைவி வெளியிட்ட வீடியோவை பகிர்ந்து சமந்தா போட்ட பதிவு | சரோஜினி சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கும் குஷ்பூ! | சூர்யா 45-ல் இணைந்த இரண்டு பிரபலங்கள் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | அல்லு அர்ஜுன் கைது மூலம் புஷ்பா 2 வசூலுக்கு உதவி செய்த முதல்வர் : ராம் கோபால் வர்மா கிண்டல் | கொஞ்சம் சீரியஸா இருங்க : பஹத் பாசிலையும் ஜோதிர்மயியையும் சத்தம் போட்ட இயக்குனர் | மோகன்லாலை இயக்கும் ஆவேசம் பட இயக்குனர் |
சமீபகாலமாக மலையாளத்தில் சின்ன பட்ஜெட்டில் வெளியாகும் படங்கள் 50 கோடி, 100 கோடி என வசூலித்து பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதில் இந்த பட இயக்குனர்களுக்கு உடனடியாக மிகப்பெரிய புகழ் கிடைப்பதுடன் இந்த படத்தின் வெற்றியே அடுத்தடுத்து அவர்களுக்கு மிகப்பெரிய ஹீரோக்களை இயக்கும் வாய்ப்பையும் தானாகவே தேடிக் கொண்டு வந்து விடுகின்றன. அப்படித்தான் ரோமாஞ்சம் என்கிற ஹாரர் காமெடி படத்தை இயக்கியவர் இயக்குனர் ஜித்து மாதவன். அந்த படத்தில் அறிமுகமில்லாத நடிகர்களை வைத்து ஹிட் கொடுத்து 100 கோடி வசூல் கிளப்பில் அந்த படத்தை சேர்த்தார்.
அதன் பயனாக அவருக்கு இரண்டாவது படத்திலேயே நடிகர் பஹத் பாசிலை வைத்து ஆவேசம் என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி வெற்றி படமாக மாற்றியதுடன் அந்த படத்தை பற்றி தென்னிந்திய அளவில் பேசவும் வைத்து விட்டார். இந்த நிலையில் ஆவேசம் படத்தின் வெற்றி இவருக்கு அடுத்ததாக மோகன்லால் படத்தை இயக்கும் வாய்ப்பையும் தானாகவே கொண்டு வந்து சேர்த்துள்ளது. கிட்டத்தட்ட இது உறுதியாகிவிட்ட தகவல் என்றே சொல்லப்படுகிறது. இந்த படத்தை மலையாள திரையுலகின் பிரபலமான கோகுலம் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது.
தற்போது மோகன்லால் நடிப்பில் அவரது 360 படமாக 'தொடரும்' என்கிற படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் இயக்குனர் தருண் மூர்த்தியும் அதற்கு முன்னதாக ஆபரேஷன் ஜாவா என்கிற ஹிட் படத்தை கொடுத்திருந்தார். அதிலும் சின்ன நடிகர்கள் தான் நடித்திருந்தார்கள். அந்த படத்தின் வெற்றிதான் மோகன்லாலின் படத்தை அடுத்ததாக இயக்கும் வாய்ப்பை அவருக்கு தேடி கொடுத்தது. இப்படி அறிமுக இயக்குநர்கள் முதல் படத்தில் தங்களது திறமையை காட்டினால், அதற்கடுத்து மிகப்பெரிய வாய்ப்பு அவர்களுக்கு கண்முன்னே இருக்கிறது என்பதைத்தான் இந்த இரண்டு இயக்குனர்களின் வெற்றிகளும் நமக்கு உணர்த்துகின்றன.