காந்தாரா சாப்டர் 1 படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ஜெயராம் | அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது | சூர்யா படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் படத்திற்கும் இசையமைக்கும் சாய் அபயங்கர் | ருக்மிணி வசந்த் பிறந்தநாள் : ‛ஏஸ்' முன்னோட்ட வீடியோ வெளியீடு | வடிவேலுக்கு எதிராக வாய் திறக்கமாட்டேன் : கோர்ட்டில் நடிகர் சிங்கமுத்து உத்தரவாதம் | சூர்யா 45வது படத்தில் விஜய் சேதுபதி? | காளிதாஸ் ஜெயராமிற்கு முதல்வர் நேரில் வாழ்த்து | பரத் படத்தில் 20 நிமிட காட்சியை நீக்கியும் 'ஏ' சான்றிதழ்: தயாரிப்பாளர் புகார் | பிளாஷ்பேக்: இசை அமைப்பாளர் ரகுவரன் | ராகவா லாரன்ஸிற்கு வில்லனாகும் மாதவன் |
1930களில் அன்றைக்கிருந்த பெண் இசை கலைஞர்களோடு நட்சத்திரமாக மின்னியவர் என்.சி.வசந்த கோகிலம். நாகப்பட்டினம் சந்திரசேகர வசந்த கோகிலம் என்பது இவரது முழுப்பெயர். கேரள மாநிலத்தில் கொச்சி சமஸ்தானத்துக்குட்பட்ட இரிஞ்சாலக்குடா எனும் ஊர்தான் பூர்வீகம்.
1936ல், இவரது 17வது வயதில் இவர் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. அதற்குள் இவர் கர்நாடக சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்ததால், சென்னை வந்தவுடன் பல இடங்களில் கச்சேரி செய்ய அழைக்கப்பட்டார். இவருடைய இனிய குரலும், அழகிய தோற்றமும், இவர் பாடும் கச்சேரிகளுக்கு மக்கள் வெள்ளம்போல் வரத் தொடங்கினர்.
திரைப்படங்களிலும் பின்னணி பாடல்கள் பாடி புகழ் பெற்றார். அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய சுத்தானந்த பாரதியாரின் பாடல்களையும் இவர் பாடி பிரபலப் படுத்தியிருக்கிறார். பொதுவாக தெலுங்கு மொழியிலும், சம்ஸ்கிருத மொழியிலும் அமைந்த பாடல்களையே பிரபலமான வித்வான்கள் பாடிவந்த நிலையில் வசந்தகோகிலம் தமிழில் பாடல்களை பாடினார்.
1940ல் "சந்திரகுப்த சாணக்கியா" எனும் படத்தில் இவர் இளவரசி சாயா தேவியாக நடித்தார். தொடர்ந்து அதே ஆண்டில் "வேணுகானம்", 1942ல் "கங்காவதார்", 1944ல் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "ஹரிதாஸ்", 1946ல் ஹொன்னப்ப பாகவதர் நடித்த "வால்மீகி", "குண்டலகேசி" ஆகிய படங்களில் நடித்தார். 1950ல் இவருடைய கடைசி படமான "கிருஷ்ண விஜயம்" வெளியானது. இவர் நடித்த அத்தனை படங்களும் ஹிட்டானது.
முதல் திருமணம் 15வயதில் நடந்தது. ஆனால் அந்த கணவருக்கு இசை பிடிக்காமல் போகவே அவரை விட்டு பிரிந்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சி.ரி.சதாசிவம் என்பவரை மணந்து கொண்டு வாழ்ந்தார். இளம் வயதிலேயே காசநோயால் பாதிக்கப்பட்டார். அப்போது அந்த நோய்க்கு உயர் சிகிச்சை இல்லாததால் 1951ல் தனது 32வது வயதில் சென்னை கோபாலபுரத்தில் இருந்த இவரது இல்லத்தில் இவர் காலமானார்.