வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். இவரது மகன் அன்புமணி ராமதாசும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராகவும் உள்ளார். அன்புமணி ராமதாஸ் - சவுமியா அன்புமணி தம்பதிகளுக்கு சங்கமித்ரா, சம்யுக்தா, சஞ்சுத்ரா என மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.
இவர்களில் சங்கமித்ரா தற்போது சினிமாவில் கவனம் செலுத்துகிறார். முதல் கட்டமாக உறுமீன், பயணிகள் கவனிக்கவும் போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் 'அலங்கு' என்ற படத்தை தயாரிக்கிறார். புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. தமிழகம் மற்றும் கேரள எல்லைப்பகுதிகளில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்சன் - த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது.
நாயகனாக குணாநிதி என்பவர் நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் சரத் அப்பானி உட்பட பலரும் நடித்துள்ளனர்.
தற்போது இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் அதனை தனது இல்லத்தில் வைத்து வெளியிட்டார். சினிமாவுக்கு எதிரான கருத்துகளை கொண்டவர்கள் ராமதாசும், அன்புமணி ராமதாசும் குறிப்பாக ரஜினியை கடுமையாக விமர்சித்தவர்கள். தற்போது அவர்களின் குடும்ப படத்தின் டீசரை ரஜினி வெளியிட்டுள்ளார்.