பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் |
2024ம் ஆண்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல முக்கிய படங்கள் வெளியாகின. இவற்றில் மற்ற மொழி படங்களை விடவும் தெலுங்கு சினிமா இந்த ஆண்டு புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஒரே ஆண்டில் இரண்டு ரூ.1000 கோடி வசூலைப் பெற்றுவிட்டது.
பிரபாஸ் நடிப்பில் வெளிந்த 'கல்கி 2898 ஏடி', அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த 'புஷ்பா 2' ஆகிய இரண்டு படங்களும் 1000 கோடி வசூலைப் பெற்றுள்ளன. 'புஷ்பா 2' படத்தின் 1000 கோடி வசூல் குறுகிய காலத்தில் நிகழ்ந்த ஒன்று.
ஹிந்தித் திரையுலகம் கூட செய்யாத இந்த சாதனையை தெலுங்குத் திரையுலகம் சாதித்துள்ளது. இதுவரையிலும் மொத்தமாக நான்கு 1000 கோடி படங்கள் தெலுங்கு சினிமா கணக்கில் எழுதப்பட்டுவிட்டது. “பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கல்கி 2898 ஏடி, புஷ்பா 2” ஆகியவைதான் அந்த நான்கு படங்கள்.
ஹிந்தியில் “டங்கல், ஜவான், பதான்” ஆகிய மூன்று படங்கள் மட்டுமே 1000 கோடி வசூலித்த படங்களாக உள்ளன.