பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் | டிசம்பர் 12ல் அறிவித்த படங்கள் சிக்கலின்றி வெளியாகுமா ? | தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் | ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ? |

கடந்த 1999ல் ரஜினிகாந்த் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் ‛படையப்பா'. இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த நிலையில் வரும் டிசம்பர் 12 அன்று ரஜினியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படம் மீண்டும் வெளியாகிறது.
இதையொட்டி ரஜினி அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, "படையப்பா படத்தின் 25ம் வருடத்தில் அதை ரீ ரிலீஸ் செய்வது தான் சிறப்பாக இருக்கும். இந்த படத்தை எனது நண்பர்களை வைத்து நானே தயாரித்தேன். அதனால் இன்றுவரை இந்த படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமை எதையும் நான் யாருக்கும் விற்கவில்லை. காரணம் அந்த படம் தியேட்டரில் பார்த்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாட வேண்டிய படம். அதனால்தான் படையப்பா படத்தின் 25 வது வருடம் நிறைவடைவதை ஒட்டி என்னுடைய பிறந்தநாளில் இந்த படத்தை ரிலீஸ் செய்கிறோம்.
படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் பொன்னியின் செல்வன் கதையில் இடம்பெற்ற நந்தினி கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருந்தது. நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு முதலில் ஐஸ்வர்யாராய் தான் என் நினைவுக்கு வந்தார். நாங்கள் நிறைய முயற்சி செய்தோம், ஆனால் அவருக்கு ஆர்வம் இல்லை. அதன் பிறகுதான் ரம்யா கிருஷ்ணன் படத்திற்குள் வந்தார். கடைசி வரை படையப்பாவிடம் தன் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் தன் உயிரையே நீலாம்பரி கதாபாத்திரம் மாய்த்துக் கொள்கிறது. அதேசமயம் இந்த ஜென்மத்தில் நீ ஜெயிச்சிட்ட அடுத்த ஜென்மத்தில் நிச்சயம் உன்னை நான் வெல்வேன் என்று சபதம் செய்வது போல காட்சி இடம் பெற்று இருந்தது. அதனால் அதை மையப்படுத்தி தற்போது இரண்டாம் பாகத்திற்கான கதை உருவாக்கம் நடைபெற்று வருகிறது. எல்லாம் சிறப்பாக அமைந்தால் படையப்பா 2, நீலாம்பரி என்கிற பெயரிலேயே இரண்டாம் பாகம் தயாராக வாய்ப்பு இருக்கிறது.
சிவாஜி சார் ஒருமுறை என்னிடம், "நான் இறக்கும்போது, என் இறுதிச் சடங்கு வரை வருவீர்களா?" என்று கேட்டார். நான், "ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர், "வயதாகிறது" என்றார். நான் உறுதியளித்தேன். அவர் மறைந்தபோது, நான் இறுதி வரை சென்றேன், இதுவரை வேறு யாருக்காகவும் நான் அப்படிச் செய்தது இல்லை. பல காட்சிகள் மற்றும் வசனங்கள் படப்பிடிப்பு தளத்திலேயே உருவாக்கப்பட்டன. நாங்கள் உருவாக்கிய பிரபலமான வசனங்களில் ஒன்றுதான்: “போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான். கிளைமாக்ஸ் காட்சிக்காக, நாங்கள் மைசூரில் 10,000 பேரை கூட்டி வந்தோம்”.
இவ்வாறு ரஜினி பேசி உள்ளார்.