குட் பேட் அக்லி டிரைலர் இன்று வெளியாகிறது | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் நேற்று மிக பெரிய அளவில் வெளியானது. தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட் அதையும் தாண்டி வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை முதல் பாகத்தின் வெற்றி உருவாக்கி விட்டது. தமிழ்நாட்டில் கூட இந்த படம் தமிழ் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தமிழ் படங்களே கூட இந்த படத்திற்காக வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டதும் ஆச்சரியம்தான்.
இந்த படம் 3 மணி நேரம் 20 நிமிடம் ஓடும் விதமாக வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த படத்தில் ஜதாரா என்கிற ஒரு நடனம் அதற்காக அல்லு அர்ஜுன் சேலை அணிந்தபடி ஒரு பெண் சாமியார் போல நடனமாடுவதும் அதன் பிறகு எதிரிகளை துவம்சம் செய்வதும் என கிட்டத்தட்ட 19 நிமிட நீளமான காட்சி ஒன்றும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அரபு நாடுகளில் இந்த படம் சென்சார் செய்யப்பட்ட போது இது மத உணர்வுகளுக்கு எதிராக இருப்பதாக அங்குள்ள அதிகாரிகளால் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த 19 நிமிட காட்சிகளும் நீக்கம் செய்யப்பட்டு தான் சென்சார் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.