ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
இயக்குனர் கவுதம் மேனன் பெயரளவில் கேரளாவை சேர்ந்தவராக ஆரம்பத்தில் இருந்தே அறியப்படுபவர் என்றாலும் அவர் இப்போது வரை மலையாளத்தில் படங்கள் இயக்கியது இல்லை. அது மட்டுமல்ல இங்கே தனது படங்களுக்கு தூய தமிழில் டைட்டில் வைக்கக்கூடிய ஒரு இயக்குனராகவும் அவர் இருக்கிறார். அதே சமயம் கடந்த சில வருடங்களாக மலையாள திரையுலகில் ஒரு நடிகராக தனது பயணத்தை துவங்கியுள்ளார் கவுதம் மேனன். இந்த நிலையில் தற்போது மம்முட்டியை வைத்து முதன் முதலாக மலையாளத்தில் 'டோம்னிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்கிற படத்தை இயக்கி வருகிறார் கவுதம் மேனன். வழக்கம் போல ஆக்ஷன் பின்னணியில் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் சுரேஷ் கோபி மகன் கோகுல் சுரேஷும் நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் இருந்து மம்முட்டியும் கோகுல் சுரேஷும் இடம் பெற்றுள்ள ஒரு டீசர் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் மம்முட்டி, “நம்மை தாக்க எதிரிகள் வருவார்கள் வந்தால் எப்படி சமாளிக்க வேண்டும்” என டெக்னிக்கலாக சுரேஷ் கோபிக்கு சண்டை செய்யும் வித்தைகளை கற்றுக் கொடுப்பது மட்டுமே ஒரு முழு டீசராக உருவாகியுள்ளது. காக்க காக்க படத்தில் ரவுடி ஜீவாவை எதிர்கொள்ள சூர்யா தனது சகாக்களுடன் திட்டம் தீட்டுவது போல இந்த காட்சி தோன்றினாலும் இதற்குள் கொஞ்சம் காமெடியும் கலந்து இருப்பது டீசரை பார்க்கும்போது தெரிகிறது.