விவாகரத்து அல்லது பிரேக்கப் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சிறந்த தருணம் ; ஐஸ்வர்ய லட்சுமி அதிரடி | வருகிறது 'புஷ்பா 3': சொல்லாமல் சொன்ன வைரல் புகைப்படம் | சைப் அலிகான் - நிகிதா தத்தா நடித்த ‛ஜூவல் தீப்' படப்பிடிப்பு நிறைவு | ‛இட்லி கடை' படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் 20 வயது தனுஷ் | ரொமான்ஸ் இல்லாத கணவர் ; பிரித்விராஜை கலாய்த்த மனைவி | கடைசி நேரத்தில் சன்னி லியோன் வருகைக்கு தடை போட்ட போலீசார் ; ரசிகர்கள் ஏமாற்றம் | மாலத்தீவில் பிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சிக்கு சென்ற வேதிகா | போதும் மகளே.. அபர்ணா பாலமுரளியிடம் கையெடுத்து கும்பிட்ட தந்தை | போலீஸ் உடையில் நின்றிருந்த வில்லன் நடிகரால் விபத்தில் சிக்கிய இளைஞர் | சினிமா விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது - ஐகோர்ட் |
மலையாளத்தில் 'மாய நதி, கிங் ஆப் கொத்த' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. தமிழில் 'ஜகமே தந்திரம்', விஷாலின் 'ஆக்சன்' உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்த 'கட்டா குஸ்தி' திரைப்படமும், 'பொன்னியின் செல்வன்' படத்தில் இவர் ஏற்று நடித்த பூங்குழலி கதாபாத்திரமும் இவரை மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. தற்போது கமல், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைப்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்ய லட்சுமி.
சமீபத்தில் மலையாளத்தில் இவர் நடித்த 'ஹலோ மம்மி' என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஒரு மனைவியாக, ஒரு குழந்தைக்கு தாயாக வாழ்க்கையில் பிரச்னையை எதிர்கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்ய லட்சுமி. அதே சமயம் 34 வயதான ஐஸ்வர்ய லட்சுமி இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் விவாகரத்து மற்றும் பிரேக்கப் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பரபரப்பான கருத்துக்களை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிறந்த தருணமாக விவாகரத்து அல்லது பிரேக் அப்பை பார்க்க வேண்டும். எதற்காக விவாகரத்து அல்லது பிரேக்கபை நீங்கள் நாடுகிறீர்கள்? நிச்சயமாக அது உங்களுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்காக தான். அதை நீங்கள் தடை என்று நினைக்காமல் உங்களுடைய வளர்ச்சியின் துவக்கப் புள்ளி என்று நினையுங்கள். முந்தைய தலைமுறையில் காதலர்களுக்குள் முன்கூட்டியே செக்ஸ் என்று ஒன்று முடிந்து விட்டால் உடனடியாக அடுத்த கட்டமாக திருமணம் செய்து கொள்வார்கள்.
ஆனால் இப்போது தலைமுறை மாறி உள்ளது. யாரும் அதில் தேங்கி நிற்க தேவையில்லை. அப்படி நீங்கள் ஒரு தவறான சூழலில் சிக்கி விட்டதாக உணர்ந்து கொண்டால் நீங்கள் திருமணம் ஆனவர் என்றாலும் கூட அதை விட்டு வெளியேறி விட வேண்டும்” என்று கூறியுள்ளார். இவரது துணிச்சலான இந்த கருத்துக்களுக்கு பாராட்டுகளை விட நெட்டிசன்களிடம் இருந்து கடும் விமர்சனங்களே அதிகம் கிடைத்து வருகிறது.