புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் |

கடந்த வருடம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தின் வெற்றிக்கு வழக்கம்போல ரஜினிகாந்தின் மாஸ் ஒரு காரணம் என்றாலும் படம் வெளியாவதற்கு முன்பே அனிருத் இசையில் வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடித்த 'காவாலா' என்கிற பாடலும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. சொல்லப்போனால் ரசிகர்களால் அதிக ரீல்ஸ் வீடியோக்கள் போடப்பட்டது இந்த பாடலுக்காக தான் இருக்கும். அந்த அளவிற்கு அந்த பாடலும் அந்த பாடளுக்கு மிக நேர்த்தியாக நடனமாடிய தமன்னாவின் ஹூக் ஸ்டெப் நடனமும் ரசிகர்களை மிகவும் ஈர்த்தது.
படத்தில் அந்த பாடல் காட்சி வரும் போது கூட ஹீரோவான ரஜினிகாந்த் அதில் ரொம்பவே அடக்கி வாசித்து இருப்பார். தமன்னாவிற்கு தான் அதிக போகஸ் கொடுக்கப்பட்டது. அனைவரும் தமன்னாவில் நடனத்தை பாராட்டவே செய்தார்கள். ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் தமன்னா கூறும்போது, ''காவாலா பாடலுக்கு நான் முழுமையான பங்களிப்பை கொடுக்கவில்லை என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது. இன்னும் கொஞ்சம் கூட நன்றாக பண்ணியிருக்கலாமோ என்று பீல் பண்ணினேன்'' எனக் கூறியுள்ளார்.
அதே சமயம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'ஸ்ட்ரீ 2' என்கிற பாலிவுட் படத்தில் 'ஆஜ் கீ ராட்' என்கிற ஒரு பாடலுக்கும் நடனம் ஆடி இருந்தார் தமன்னா. ஆனால் இதில் தனக்கு முழு திருப்தி கிடைத்ததாக கூறியுள்ளார். இந்தப் பாடளுக்கு தான் நடனம் ஆடியது குறித்து படத்தின் இயக்குனர் அமர் கவுஷிக் கூறும் போது, இந்தப் பாடலின் மூலமாக ஒரு கதாபாத்திரமாகவே தமன்னா மாறி இருந்தார் என்று கூறியதே இதற்கு போதுமானது என்று கூறியுள்ளார் தமன்னா.




