'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட திரை உலகில் அறிமுகமானாலும் தெலுங்கில் நடித்த படங்கள் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அதை தொடர்ந்து தமிழ் மற்றும் ஹிந்தியில் நடிக்கும் அளவிற்கு வெகுவேகமாக முன்னேறினார். திரையுலகை சேர்ந்த பிரபலங்களே நேஷனல் கிரஷ் என்று செல்லமாக அழைக்கும் அளவிற்கு அனைவருக்கும் பிடித்த நடிகையாகவும் மாறினார். அந்த வகையில் கடந்த வருடம் இரண்டு பாலிவுட் படங்களில் அவர் நடித்திருந்தாலும் அதில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்திருந்த 'அனிமல்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பாலிவுட்டிலும் ராஷ்மிகாவை ஒரு வெற்றிகரமான கதாநாயகியாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்னும் சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. அதுமட்டுமல்ல இவர் தற்போது நடித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படமும் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. புஷ்பா முதல் பாகம் வெளியானது கடந்த 2021 டிசம்பர் மாதம் தான். அதேபோல அனிமல் திரைப்படம் வெளியானது கடந்த டிசம்பர் 1ம் தேதி. இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதேபோல தற்போது ராஷ்மிகா நடித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படமும் டிசம்பர் மாதம் தான் வெளியாகிறது. இதனால் தனக்கு உண்மையிலேயே டிசம்பர் மாதம் என்பது ஸ்பெஷல் தான் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. இது குறித்து சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா.