‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் தயாரான அவதார் படத்தின் முதல் பாகம் 2009-ல் வெளியாகி வசூலை குவித்தது. இதன் அடுத்த பாகமான 'அவதார்: தி வே ஆப் வாட்டர்' கடந்த 2022-ல் வெளியானது. தற்போது அவதார் படத்தின் மூன்றாம் பாகமான 'அவதார்: பயர் ஆண்ட் ஆஷ்' படம் தயாராகி வருகிறது.
இந்த படம் 3 மணிநேரம் 12 நிமிடம் ஓடக்கூடிய வகையில் இருக்கும். வருகிற டிசம்பர் மாதம் 19-ந்தேதி வெளியாகிறது. 4-ம் பாகம் 2029 டிசம்பர் மாதத்திலும் 5-ம் பாகம் 2031 டிசம்பர் மாதமும் வெளியாகும். இந்த தகவல்களை ஜேம்ஸ் கேமரூன் தனது சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
3ம் பாகத்தின் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. படப்பிடிப்புகள் முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகிறது. இரண்டாவது பாகம் நீரில் நடக்கும் போராட்டடமாக இருந்து. இந்த பாகம் நெருப்பில் நடக்கும் போராட்டமாக உருவாகி வருகிறது.