வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் நடிகர் விஜய். அவருக்கு அடுத்ததாக சம்பளம் வாங்குகிறார். அதே சமயம் அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட தயாராகிவிட்ட விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படம் தான் சினிமாவில் தனது கடைசி படம் என்றும் கூறிவிட்டார்.
இந்த நிலையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் தந்தையை போல நடிப்பில் இறங்காமல் தனது தாத்தாவைப் போல டைரக்ஷன் துறையில் அடி எடுத்து வைத்துள்ளார். லைகா நிறுவனத்தில் தனது முதல் படத்தை அவர் இயக்குவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அவரது முதல் பட ஹீரோவாக சந்தீப் கிஷன் இடம் பிடித்துள்ளார். ரசிகர்கள் பலரும் ஜேசன் சஞ்சய்க்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் ரசிகர்கள் பலரும் திரையுலகை சேர்ந்தவர்களும் கூட ஒரு விஷயத்தை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அதாவது விஜய் சினிமாவில் அறிமுகமான சிறு வயது கதாபாத்திரம் என்றாலும் சரி, ஹீரோவாக என்றாலும் சரி, அவரது தந்தையின் டைரக்ஷனில் தான்.. அப்படிப்பட்டவர் தற்போது தனது மகன் இயக்குனராக அறிமுகமாகும் நிலையில் அவரது டைரக்ஷனில் தனது கடைசி படத்தை நடித்திருந்தால் உலக சினிமாவிலேயே தந்தையின் டைரக்ஷனில் திரையுலக பயணத்தை துவங்கி மகன் டைரக்ஷனில் தனது பயணத்தை முடித்து இது போன்ற சாதனையை செய்த ஒரே நடிகர் என்கிற பெயரை பெற்றிருக்கலாம். அதை தவற விட்டு விட்டாரே என்று வருத்ததுடன் கூறுகிறார்கள். ஆனால் விஜய்க்கு இப்படி ஒரு விஷயம் தோன்றி இருக்குமா?