ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
வினோத் இயக்கத்தில், விஜய் நடிக்க உள்ள அவரது கடைசி படம் விஜய் 69. பெயரிடப்படாத அப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது. அப்படம் கடந்த வருடம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என பேசப்பட்டு வந்தது.
படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வரும் நிலையில் தற்போது அப்படத்தின் ரீமேக் உரிமையை விஜய் 69 தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வாங்கியுள்ளதாம். அந்தப் படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகவில்லை என படக்குழு சார்பில் தகவல்கள் வெளிவந்தன.
இருந்தாலும் படம் வெளியாகும் போது ஏதாவது ஒரு சர்ச்சை வந்தால் அதைத் தவிர்ப்பதற்காக தற்போது அதன் ரீமேக் உரிமையை பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளார்களாம். அனில் ரவிபுடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், ஸ்ரீலீலா, அர்ஜுன் ராம்பால், சரத்குமார் மற்றும் பலர் நடித்த அப்படம் 100 கோடி வசூலைக் கடந்த வெற்றிப் படம்.
அப்படத்தின் மையக் கருவை வைத்துக் கொண்டு விஜய்க்கு ஏற்றபடியும், தமிழுக்கு ஏற்றபடியும் காட்சிகளை அமைத்து விஜய் 69 கதை எழுதப்பட்டிருக்கலாம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.