ரோபோ சங்கர் மறைவு : திரையுலகினர் அஞ்சலி | ரோபோ சங்கர் மறைவு : மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன.? | நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு |
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா - நடிகை அமலா தம்பதியினரின் ஒரே மகன் அகில் அக்கினேனி. இவரும் தெலுங்குப் படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஆறு படங்களில் கதாநாயகனாக நடித்துவிட்டாலும் இன்னும் குறிப்பிடத்தக்க பெரிய வெற்றியைப் பெறாமல் இருக்கிறார்.
இதனிடையே, நேற்று தன்னுடைய மகன் அகில் திருமண நிச்சயதார்த்தம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நாகார்ஜுனா. ஜைனப் ரவ்ட்ஜி என்ற பெண்ணுடன் அகிலுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. கட்டுமானத் துறையில் பிரபலமாக இருந்து வரும் ஜுல்வி ரவ்ட்ஜி என்பவரது மகள்தான் ஜைனப். 39 வயதாகும் இவர் ஓவியக் கலைஞர். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்.
தங்களது திருமணம் குறித்த பதிவை சில புகைப்படங்களுடன் தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் அகில். இருந்தாலும் அதில் கமெண்ட் பகுதியை தடை செய்துவிட்டார். தன்னை விட 9 வயது மூத்தவர், முஸ்லிம் பெண் என்பதால் தேவையில்லாத கமென்ட்டுகள் வரும் என்பதால் அவர் அதை தடுத்துள்ளதாகத் தெரிகிறது.
நாகார்ஜுனாவுக்கும் அவரது முதல் மனைவி லட்சுமிக்கும் பிறந்த நடிகர் நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் அடுத்த மாதம் நடக்க உள்ள நிலையில், நாகார்ஜுனாவுக்கும் அவரது இரண்டாவது மனைவி அமலாவுக்கும் பிறந்த அகில் திருமண நிச்சயமும் தற்போது நடந்து முடிந்துள்ளது. அகில், ஜைனப் திருமணம் அடுத்த வருடம் நடக்கும் எனத் தெரிகிறது.