விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு | பிளாஷ்பேக்: அந்தக் கால 'மிடில் கிளாஸ்' | அப்பாவுக்கு என்னாச்சு? கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் | அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் |

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் 'புஷ்பா 2' படம் அடுத்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் நேற்றுத்தான் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள்.
'புஷ்பா' படத்தின் முதல் பாகம் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் இரண்டாம் பாகம் வெளியாகப் போகிறது. முதல் பாகத்தின் படப்பிடிப்பை 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பித்தார்கள். ஆனால், கொரோனா காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தினார்கள். அதன் பின் மீண்டும் 2020 நவம்பர் மாதம் ஆரம்பித்து 2021 நவம்பர் மாதத்தில் முடித்தார்கள்.
அது போல முதல் பாகம் வெளிவந்த பின்பு அடுத்த சில மாதங்களில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கவில்லை. 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் ஆரம்பித்தார்கள். படப்பிடிப்பும் தொடர்ச்சியாக நடைபெறவில்லை. அவ்வப்போது இடைவெளி விட்டுத்தான் முடித்தார்கள்.
இப்படத்திற்காக வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் கடந்த ஐந்து வருடங்களாக இந்த இரண்டு பாகங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார் அல்லு அர்ஜுன். நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்த நிலையில், “புஷ்பா கடைசி நாள் கடைசி காட்சி படப்பிடிப்பு. புஷ்பாவின் ஐந்து வருடப் பயணம் முடிந்தது. என்ன ஒரு பயணம்…,” எனக் குறிப்பிட்டுள்ளார்.




