விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' | இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்! | 'கூலி' பட டிக்கெட் கட்டணம் ரூ.500: தியேட்டர்களுக்கு தரப்படும் அழுத்தம்! | மிஷ்கின் என்னை பாப்பா என்று அழைப்பார்! : ஸ்ருதிஹாசன் | ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் | ரஜினியின் முதல் படமும், 50வது ஆண்டு 'கூலி' படமும் வெளியாகும் ஒரே தியேட்டர் |
'புஷ்பா 2' படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டார் ஆக பிரபலமானவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். அப்படத்தின் பிரிமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் அனுமதி இன்றி நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் இறந்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அந்த சர்ச்சை இன்னும் ஓயாமல் உள்ளது. கடந்த வாரம் கூட மனித உரிமைகள் ஆணையம் தெலுங்கானா அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் நேற்று மும்பை விமானநிலையத்தில் நடந்த ஒரு விவகாரத்தில் அல்லு அர்ஜுன் மற்றுமொரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். நேற்று விமானத்தில் பயணிக்க வந்த போது விமானநிலைய பாதுகாப்பு ஊழியர் ஒருவர், அல்லு அர்ஜுன் அணிந்திருந்த மாஸ்க், கூலிங் கிளாஸ் ஆகியவயற்றை முக அடையாளத்திற்காக கழட்டச் சொன்னார். அதைக் கேட்டு திடுக்கிட்டார் அல்லு அர்ஜுன். அப்போது பக்கத்தில் இருந்த அல்லு அர்ஜுன் உதவியாளர் பாதுகாப்பு ஊழியரிடம் என்னவோ சொல்கிறார். இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாத ஊழியர் அவற்றைக் கழற்றச் சொல்வதில் உறுதியாக இருந்தார்.
கடைசியில் சில வினாடிகள் உடனடியாக மாஸ்க், கூலிங்கிளாஸ் ஆகியவற்றை கழட்டி மாட்டிக் கொண்டார் அல்லு அர்ஜுன். இதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
விமான நிலைய பாதுகாப்பு விதிகளை மதிக்காத அல்லு அர்ஜுனைக் கைது செய்ய வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்துள்ளார்கள். எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் இந்திய சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று பலரும் அவருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.