257 நாட்கள் நடந்த 'விடுதலை 1, 2' படப்பிடிப்பு | தாவணியில் ஜொலிக்கும் பிக்பாஸ் சிவின்! | பிளாஷ்பேக்: பழம்பெரும் பாலிவுட் நடிகர் வி சாந்தாராம் தயாரித்த பைந்தமிழ் திரைக்காவியம் “சீதா கல்யாணம்” | எங்க வீட்டுக்கு வந்த மகாலட்சுமி ; அதிதிக்கு சித்தார்த் புகழாரம் | நயன்தாராவுக்கு ரூ.25 கோடி; நாக சைதன்யாவுக்கு ரூ.50 கோடி- நெட்பிளிக்ஸ் திருமண பேரம் | 8ம் ஆண்டு திருமண கொண்டாட்டத்தில் திலீப் - காவ்யா மாதவன் | இளைய மகன் திருமணத்தை அறிவித்த நாகார்ஜுனா | முதல்முறையாக ரீ ரிலீஸ் ஆகும் குணா! | தேவி ஸ்ரீ பிரசாத்தை தொடர்ந்து படங்களில் இருந்து நீக்கும் தயாரிப்பு நிறுவனம்! | சிவகார்த்திகேயன், ஏ. ஆர். முருகதாஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? |
வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி மற்றும் பலர் நடித்துள்ள 'விடுதலை 2' படம் அடுத்த மாதம் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் மார்ச் மாதம் வெளியானது. விமர்சன ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் இரண்டாம் பாகம் கடந்த வருடக் கடைசியிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வருடக் கடைசியில்தான் வெளியாகிறது.
நேற்று 'விடுதலை 2' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் இளையராஜா, விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், ராஜிவ் மேனன் மற்றும் படத்தின் இதர கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டிற்கும் சேர்த்து மொத்தம் 257 நாட்கள் படப்பிடிப்பு நடந்தாகச் சொன்னார். “கடைசி நாள் அன்று கூட படப்பிடிப்பை நிறுத்திக்கிறேன் என்றுதான் சொன்னேன். முடித்துக் கொள்கிறேன் என்று சொல்லவில்லை. இன்னும் படப்பிடிப்பு நடத்த வேண்டியது இருந்தது,” என்றார்.
இப்படத்திற்கான படப்பிடிப்புக்கு அதிக நாட்களை வெற்றிமாறன் எடுத்துக் கொண்டார் என்ற பேச்சு திரையுலகத்தில் இருந்தது. பீரியட் பிலிம் என்பதால் அவ்வளவு நாட்கள் என்றும் சமாதானமும் சொல்லப்பட்டது.