ஓடிடியில் வெளியாகும் பொங்கல், சங்கராந்தி படங்கள் | சூர்யாவின் 'கருப்பு': விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'டாக்சிக்' தெலுங்கு வியாபாரம் 120 கோடி உண்மையா? | வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் |

நடிகர் நாகார்ஜுனா - நடிகை அமலா தம்பதியினரின் ஒரே மகன் அகில் அக்கினேனி - ஜைனப் ரவ்ட்ஜி திருமணம் இன்று விடியற்காலை ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவில் வீட்டில் எளிமையாக நடைபெற்றது. இரு வீட்டாராது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சிலர் மட்டுமே இதில் கலந்து கொண்டுள்ளனர்.
நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா, அவரது மனைவி நடிகை சோபி துலிபலா, நடிகர் சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா, அவரது மகன் ராம் சரண் உள்ளிட்டோர் விடியற்காலையிலேயே நாகார்ஜுனா வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
வரும் ஞாயிறு ஜுன் 8ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனா குடும்பத்தினருக்குச் சொந்தமான அன்னபூரனா ஸ்டுடியோஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக அகில், ஜைனப் காதலித்து வந்தனர். கடந்த வருடம் இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றது. அகிலை விட ஜைனப், ஒன்பது வருடங்கள் மூத்தவர் என்ற தகவல் ஏற்கெனவே வெளியாகி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. அகிலுக்கு 30 வயது ஜைனப்பிற்கு 39 வயது எனத் தகவல்.
இருவரது திருமண வரவேற்பில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.




