ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
கமல்ஹாசன் ரசிகர்கள் தமிழகத்தில் அவரது புதிய வெளியீடான 'தக் லைப்' படத்தை ரசித்துக் கொண்டிருக்க, ஜப்பான் சினிமா ரசிகர்கள் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தைத் தற்போது ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்த 'விக்ரம்' படம் 2022ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. பல வசூல் சாதனைகளை முறியடித்து 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
அப்படத்தைத் தற்போது ஜப்பான் நாட்டில் கடந்த வாரம் மே 30ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்தார்கள். சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமாக அப்படம் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில வருடங்களாக இந்தியத் திரைப்படங்கள் ஜப்பானில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்று வருகிறது.
'விக்ரம்' படத்தைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கி விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படமும் இந்த மாதம் ஜப்பான் நாட்டில் வெளியாக உள்ளது.