மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' |

‛ஜெயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான ரவி, அந்தபடம் தந்த வெற்றியால் ‛ஜெயம்' ரவியாக வலம் வந்தார். 23 ஆண்டுகளில் வெற்றி, தோல்வி என மாறி மாறி பயணித்து, முன்னணி நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்தார். இருவரும் விவாகரத்து கேட்டுள்ளனர். இந்த வழக்கு சென்னை, குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் என மாற்றினார். தனிப்பட்ட வாழ்க்கையை கடந்து சினிமாவில் ரவி அடுத்தடுத்து புதிய பாதையில் பயணிக்க உள்ளார். விரைவில் இயக்குனராக களமிறங்க உள்ள அவர், தனது முதல் படத்தை யோகி பாபுவை வைத்து இயக்க போகிறார்.
இந்நிலையில் அடுத்து தயாரிப்பாளராகி உள்ளார். தனது பெயரிலேயே ‛ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி உள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.