கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
நடிகர் நாகார்ஜுனா - நடிகை அமலா தம்பதியினரின் ஒரே மகனான அகில் மற்றும் ஜைனாப் ரவ்ட்ஜீ ஆகியோரின் திருமணம் வரும் ஜுன் 6ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. அத்திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோரை அழைத்து வருகிறார் நாகார்ஜுனா.
கடந்த வாரம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து திருமண அழைப்பிதழைக் கொடுத்தார். இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஆந்திராவின் தலைநகராக உருவாகி வரும் அமராவதிக்குச் சென்று சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
இதனிடையே, இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற 'குபேரா' படத்தின் இசை வெளியீட்டிலும் கலந்து கொண்டார் நாகார்ஜுனா. இங்கு சென்னையில் அவர் யார், யாரையெல்லாம் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை. 'கூலி, குபேரா' படங்களில் நாகார்ஜுனா நடித்துள்ளதால் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரை நிச்சயம் அழைத்திருக்க வாய்ப்புண்டு. தனது தமிழ்த் திரையுலக மற்ற நண்பர்களையும் அவர் அழைத்திருக்கலாம் எனத் தெரிகிறது.