ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

நடிகை ஷோபனா திரையுலகில் நுழைந்து கிட்டத்தட்ட 40 வருடங்களாக தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான தொடரும் படத்தில் அவருக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்திருந்தார். படத்தில் அவரது நடிப்புக்கு ரசிகர்களின் பாராட்டுக்கள் வெகுவாக கிடைத்தது. படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்து 200 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த சந்தோஷத்தில் இருந்த ஷோபனாவுக்கு தற்போது அவரது சிறு வயது தோழியான அனிதாவின் மரணம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுவயதிலேயே கேரளாவில் இருந்து சென்னை மயிலாப்பூருக்கு பெற்றோருடன் ஷோபனா குடிபுகுந்த போது, அவரது பக்கத்து வீட்டில் வசித்தது தான் அனிதா மேனனின் குடும்பம். ஷோபனாவை விட மூன்று வயது குறைவு என்றாலும் கூட இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்து வந்தனர். ஷோபனா சினிமாவில் பிசியான காலகட்டத்தில் கூட அனிதாவுடன் நட்பை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அனிதா மேனன் மறைந்தது மிகப்பெரிய வருத்தத்தை ஷோபனாவுக்கு ஏற்படுத்தி உள்ளது. தாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட சிறு வயது புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ஷோபனா, அனிதா மேனனுக்கு தன்னுடைய இரங்கலையும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.




