அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா |

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா முதன் முறையாக நாயகனாக நடிக்கும் படம் 'பீனிக்ஸ் வீழான்'. இந்தப் படத்தை பிரபல சண்டை இயக்குநர் அனல் அரசு இயக்குகிறார். ஆக்ஷன் - ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகும் இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இந்தப் படம் வரும் நவம்பர் 14ம் தேதி (நாளை)திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான 'பீனிக்ஸ் (வீழான்)' நவம்பர் 14 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு குழுவாக நாங்கள் இன்னும் அதிக உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் சிறந்த சினிமா அனுபவத்தை வழங்க அயராது உழைத்து வருகிறோம். மாற்றியமைக்கப்பட்ட வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். தங்களது தொடர்ச்சியான ஆதரவு, புரிதல் மற்றும் தங்களது பொறுமைக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
'பீனிக்ஸ் (வீழான்)' முன்னெப்போதையும் விட வலுவாக உருவாகி வெளியாகும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம், அது வெளியாகும்போது, அது ஒரு ஆரவாரமாக இருக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.