நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் | தனுஷ் மருமகன் நடிக்கும் அடுத்த படம்: தாத்தா கஸ்தூரிராஜா தொடங்கி வைத்தார் | சித்திரம் பேசுதடி ஹீரோயினுக்கு சாருனு பெயர் வைத்தது ஏன்? மிஷ்கின் | மீண்டும் துப்பாக்கி பயிற்சியில் இறங்கிய அஜித் | ஆபாச படத்தைக் காட்டி 2 கோடி கேட்டு மிரட்டிய நடிகை | அதிக சம்பளமா? அதிர்ச்சியான மமிதா பைஜூ | நடிகை ஆன பெண் இயக்குனர் |

இந்தியாவின் 'நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படும் பி.சுசீலாவுக்கு இன்று 89வது பிறந்த நாள். 1950களில் சினிமாவில் பின்னணி பாடகியாக பயணத்தை தொடங்கினார். சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக 17,000க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் அவர் பாடல் பாடியுள்ளார். அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். பாரம்பரிய இசை குடும்பத்தில் பிறந்த அவர் பால்ய வயதில் இருந்தே அவரது இசை பயணம் தொடங்கியது. திரைத்துறையில் பல்வேறு இசையமைப்பாளர்களுடன் அவர் பணியாற்றி உள்ளார்.
'பாரத ரத்னா' தவிர்த்து இந்தியாவின் அனைத்து உயரிய அரசு விருதுகளை பெற்றவர். கின்னஸ் சாதனை படைத்தவர். இதே நேரத்தில் வெளியுலகம் அறியாத இன்னொரு சாதனையும் உண்டு. அது அவர் ஒரே நடிகைக்கு 150 பாடல்களுக்கு மேல் பின்னணி பாடி உள்ளார். அவர் கன்னட நடிகை ஜெயந்தி.
1963ல் 'ஜெனு காடு' என்ற கன்னட படத்தில் அறிமுகமானார் ஜெயந்தி. அந்த படத்தில் ஜெயந்தி நடித்த முதல் பாடலை பாடியவர் பி.சுசீலா. அதைப்போல் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான "எதிர் நீச்சல்" படத்திலும் பி.சுசீலாவே அவருக்கு பின்னணி பாடினார். தெலுங்கில் அறிமுகமான 'ஜாலி மெடலு' படத்திலும் பி.சுசீலாதான் அவருக்கு பின்னணி பாடினார். ஜெயந்தி தமிழ் தெலுங்கில் பிரபலமாக இருந்தாலும் கன்னடத்தில் உச்சத்தில் இருந்தார். கன்னடத்தில் ராஜ்குமாருடன் அதிக படங்களில் நடித்த பெருமை இவருக்கு உண்டு. எல்லா மொழிகளிலும் சேர்த்து ஜெயந்திக்கு 150க்கும் மேற்பட்ட பாடல்களை பி.சுசீலா பாடி உள்ளார். அதில் 100 பாடல்கள் கன்னட பாடல்கள்.