Advertisement

ஜெயந்தி

Birthday
11 Oct 1950 (Age )

கர்நாடகாவின் பெல்லாரியில் பிறந்த இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, மராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகி, குணசித்திர நடிகை என பல வேடங்களில் நடித்துள்ளார். 1963ம் ஆண்டு ஜீனுகூடு என்ற கன்னட படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான ஜெயந்தி, தமிழில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார். கே.பாலசந்தர் இயக்கத்தில் பல படங்களில் நடித்த நடிகையும் இவர் தான். இவர் தனது நடிப்பிற்காக ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் இந்திரா உள்ளிட்டோர் கைகளால் பல விருதுகளை பெற்றுள்ளார். நடிகை, தயாரிப்பாளர், பின்னணி பாடகி என பல பரிமாணங்களைப் பெற்ற இவர், பல பட்டங்களையும் பெற்றுள்ளார்.