'ஏ' சான்றிதழ் படத்தில் 4 ஹீரோயின்கள் | எரிந்து போன முதல் படம், நடன நடிகை, தமிழ் நாட்டின் முதல்வர்: வி.என்.ஜானகி நூற்றாண்டு | பிளாஷ்பேக் : அமிதாப் பச்சனை மிஞ்சிய சிவாஜி | அனைத்து தடைகளும் நீங்கி வெளியானது கங்குவா : ரசிகர்கள் உற்சாகம் | பிக்பாஸ் வருவதற்கு டாக்டரிடம் பரிந்துரை செய்தேன்- அன்ஷிதா | புஷ்பா 2 டப்பிங் ஜரூர் : ஆனால் ராஷ்மிகா முகத்தில் சோகம் | குபேரா படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு | யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படக்குழு மீது வழக்குப்பதிவு | ‛அமரன்' ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை | கங்குவா டிரைலர் - அஜித் கொடுத்த ரியாக்ஷன் |
தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களில் இருந்து திறந்த வெளிக்கு அழைத்துச் சென்றவர் பாரதிராஜா என்பார்கள். ஆனால் அப்படியான முயற்சி 1930களிலேயே தொடங்கி விட்டது. ஹாலிவுட் மற்றும் கொரியன் படங்களின் தாக்கத்தில் இப்போதும் படங்கள் வெளிவருது உண்டு. அதே போல அந்த காலத்திலும் இருந்திருக்கிறது. அப்போது ஹாலிவுட் படமான 'டார்ஜானை' தழுவி தமிழில் 1938ல் 'வனராஜ கார்ஸன்', ஹிந்தியில் 'ஜங்கிள் கிங்' என்ற பெயரில் ஒரு படம் உருவானது.
இந்த படத்தை ஹோமி வாடியா என்ற ஆங்கில இயக்குனர் இயக்கினார், ஜான் கேவாஸ் என்ற சண்டை இயக்குனர் நாயகனாக அதாவது டார்ஜானாக நடித்தார். அவருக்கு ஜோடியாக கே.ஆர்.செல்லம் என்ற நடிகை நடித்தார். படத்திற்கு ஒளிப்பதிவு செய்தது ஆங்கில ஒளிப்பதிவாளர்களான ருஸ்டம் மெய்பரும், பாலி மிஸ்ட்ரியும், யானை அனந்த ராம அய்யரும், வைத்தியநாத அய்யரும் இசை அமைத்திருந்தார்கள். இயக்னர் வாடியாவே மெட்ராஸ் யுனைடெட் ஆர்ட்டிஸ்டுடன் இணைந்து தயாரித்தார்.
இந்த படத்தில் நாயகி கே.ஆர்.செல்லம், நீச்சல் உடையில் நடித்ததற்கு அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியது. குடும்ப சுமையாலும், இயக்குனரின் வற்புறுத்தலாலும் அப்படி நடித்ததாக கே.ஆர்.செல்லம் விளக்கம் கொடுத்து மன்னிப்பும் கேட்டார். ஆனால் இந்த படம் செல்லத்திற்கு பெரிய எதிர்காலத்தை உருவாக்கியது. லக்ஸ் சோப் விளம்பரத்தில் அதே மாதிரி பிகினி உடை அணிந்து நடித்தார்.