'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்கில் இளம் நடிகர் நானி நடிப்பில் பிரபல இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு சமீபத்தில் 'தி பாரடைஸ்' என டைட்டில் அறிவிக்கப்பட்டது. அதே சமயம் இப்படி டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக எதிர்பாராத விதமாக சோசியல் மீடியாவில் அது லீக் ஆனது. இதற்கு இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலாவின் உதவி இயக்குனர்களில் யாரோ தான் இப்படி செய்திருக்க வேண்டும் என்கிற விமர்சனமும் எழுந்தது. இந்த நிலையில் அது பற்றி விளக்கம் அளிக்கும் விதமாக மவுனம் கலைத்துள்ள ஸ்ரீகாந்த் ஒடேலா கடுமையான பதிலடி ஒன்றையும் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இது போன்று படங்களின் டைட்டில் லீக் ஆகும்போது படத்தின் உதவி இயக்குனர்களையோ அல்லது கதாசிரியர்களையோ குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டால் சிறப்பாக இருக்கும். இது என் படத்திற்காக மட்டும் சொல்லவில்லை. எல்லா படத்திற்கும் தான். இவர்கள் அனைவருமே எதிர்கால படைப்பாளிகள்.. அவர்களது சுயநலமில்லாத பங்களிப்பு சினிமாவில் மிகவும் மதிக்கப்பட வேண்டிய ஒன்று.
அதனால் இப்படி கடின உழைப்பை கொடுக்கும் நபர்களை குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு புதிதாக வேறு ஏதாவது யோசியுங்கள்.. இந்த டைட்டிலை லீக் செய்தது யார் (ஒரு கெட்ட வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்) என்று எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் என்னுடைய குழுவில் இல்லை” என்று கூறியுள்ளார்.