'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழில் எப்போதாவது சின்ன பட்ஜெட் படங்கள் எதிர்பாராத விதமாக வெற்றியை பெறுவதுண்டு. அதே சமயம் அந்த படத்தின் வெற்றி அதில் பங்கு பெற்ற, பல காலமாக ஒரு நல்ல வெற்றிக்காக காத்திருந்த பல கலைஞர்களுக்கு மறுவாழ்வையும் கொடுப்பதுண்டு. அப்படித்தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் இருவரும் இணைந்து நடித்த லப்பர் பந்து என்கிற திரைப்படம் வெளியானது. தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கிய இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை சுவாசிகா நடித்திருந்தார். அவரது மகளாக இன்னொரு கதாநாயகியாக 'வதந்தி' வெப் தொடரில் வெலோனி பாத்திரத்தில் நடித்த சஞ்சனா நடித்திருந்தார்.
ஆனாலும் அட்டகத்தி தினேஷின் மனைவியாக நடித்திருந்த சுவாசிகாவின் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக படம் பார்த்த அனைவருமே சுவாசிகாவின் நடிப்பை பாராட்டினார்கள். கடந்து பத்து வருடங்களுக்கு முன்பு தமிழில் சின்ன சின்ன படங்களில் நடித்து கவனம் பெறாமலேயே மலையாளத் திரையுலகை நோக்கி நகர்ந்த சுவாசிகாவுக்கு தமிழில் இது ஒரு நல்ல ரீ என்ட்ரி ஆக அமைந்து விட்டது.
இந்த நிலையில் மலையாளத்தில் உருவாகியுள்ள 'ஒரு அன்வேசத்தின்டே தொடக்கம்' என்கிற புலனாய்வு திரில்லர் படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சுவாசிகா. படத்தின் டிரைலரை பார்க்கும்போது இவருக்கு இந்த படமும் ஒரு முக்கிய மைலேஜ் கொடுக்கும் என தெரிகிறது. அனேகமாக இனிவரும் நாட்களில் நடிகை சுவாசிகா வெற்றிகரமாக ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.