பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அதவானி, அஞ்சலி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படமான 'கேம் சேஞ்சர்' படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு மேல் யூடியூப் தளத்தில் வெளியானது.
படத்தின் தெலுங்கு டீசருக்கு தெலுங்கு சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரே இரவில் மட்டும் 25 மில்லியன் பார்வைகளை அது கடந்துள்ளது. 24 மணி நேரம் முடிய இன்று மாலை வரை நேரம் இருக்கிறது. இன்னும் 17 மில்லியன் பார்வைகள் அதற்குள் கிடைத்தால் 42 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் இருக்கும் 'ராதே ஷ்யாம்' பட டீசரின் சாதனையை முறியடித்துவிடும்.
'கேம் சேஞ்சர்' ஹிந்தி டீசர் 50 லட்சம் பார்வைகளையும், தமிழ் டீசர் 15 லட்சம் பார்வைகளையும் தற்போது வரை பெற்றுள்ளது. தெலுங்கு டீசரின் வரவேற்புடன் ஒப்பிடும் போது இவற்றின் வரவேற்பும், பார்வையும் குறைவாகவே உள்ளது.