இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
இயக்குநர் சிகரம் கே பாலசந்தரின் கரங்களால் குட்டுப்பட்ட திரைக்கலைஞர்களில் குறிப்பிடும்படியான ஒரு நடிகர் டெல்லி கணேஷ். குணச்சித்திரம், நகைச்சுவை என பன்முகத் தன்மை கொண்ட தனது பண்பட்ட நடிப்பாற்றலால் உயர்ந்து தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்ட இந்த அற்புத திரைக்கலைஞர் இன்று நம்மோடு இல்லை. சென்னையில் அவரது இல்லத்தில் நேற்றிரவு தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. சினிமாவில் டெல்லி கணேஷ் கடந்து வந்த பாதை இங்கே உங்களுக்காக...
விமானப்படை வீரர்
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு என்ற ஊரில், 1944ம் ஆண்டு ஆகஸ்ட் 1ல் பிறந்தார். இவரது இயற்பெயர் கணேசன். 1964ல் இந்திய விமானப் படையில் சேர்ந்த இவர் 1974ம் ஆண்டு வரை பணிபுரிந்தார். இடையிடையே அங்கே “தக்ஷிண பாரத நாடக சபா” என்ற நாடகக் குழுவில் இணைந்து பல நாடகங்களிலும் நடித்தார்.
அபூர்வ சகோதரர்கள் படம்
நாடகம் டூ சினிமா
நடிகர் 'சோ'வின் “மனம் ஒரு குரங்கு”, நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் “ஒரு பொய்”, “தீர்ப்பு” போன்ற பிற நாடகக் குழுக்களின் நாடகங்களையும் வாங்கி, அதிலும் நடித்து அரங்கேற்றம் செய்தும் வந்தார். பின்னர் சென்னை வந்த இவருக்கு, டெல்லியில் இவரோடு மேடை நாடகங்களில் நடித்து வந்த டிடி சுந்தர்ராஜன் என்பவரின் மூலம் நடிகர் 'காத்தாடி' ராமமூர்த்தியின் அறிமுகம் கிடைத்து. அதன் வாயிலாக “டௌரி கல்யாணம்” என்ற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். நடிகர் டெல்லி கணேஷ். இதுவே சென்னையில் இவர் நடித்த முதல் மேடை நாடகம் ஆகும்.
1977ல் இயக்குநர் கே பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த “பட்டினப்பிரவேசம்” என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகராக வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். அதுவரை வெறும் கணேஷ் என்று இருந்த இவரது பெயரையும் டெல்லி கணேஷாக மாற்றியவர் கே பாலசந்தர்.
எம்ஜிஆர் கைகளால் விருது
1979ல் இயக்குநர் துரை இயக்கிய “பசி” திரைப்படத்தில் ரிக்ஷா இழுக்கும் தொழிலாளியாக சென்னை பாஷை பேசி, தனது இயல்பான நடிப்பை வெளிக்காட்டி அனைவரது மனங்களையும் வென்றார். இவரது நடிப்பை பாராட்டி தமிழ்நாடு அரசு சிறந்த நடிகருக்கான விருதினை அன்றைய தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் கரங்களால் வழங்கி கவுரவிக்கப்பட்டார். கே பாலசந்தர் இயக்கத்தில் 1985ம் ஆண்டு வெளிவந்த “சிந்து பைரவி” படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த 'குருமூர்த்தி' என்ற கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியா வண்ணம் தனது இயல்பான நடிப்பால் உயர்ந்து நின்றார்.
அபூர்வ சகோதரர்கள் படம் |
தெனாலி படம் |
இயக்குநர் கே பாலசந்தர் தொடங்கி, ஏறக்குறைய தமிழ் திரையுலகின் அனைத்து முன்னணி மற்றும் இன்றைய இளம் இயக்குனர்கள் வரை அனைவரோடும் பணிபுரிந்த இவர், இயக்குநர் பாரதிராஜா மற்றும் கே பாக்யராஜ் திரைப்படங்களில் நடிக்காதது துரதிர்ஷ்டமே.
சங்கமம் படம் |
ஒரு நீண்ட நெடிய வெள்ளித்திரைப் பயணத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உட்பட அனைத்து மொழிகளிலும் 400க்கும் அதிகமான படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த இந்த கலைஞன் இன்று தனது பூலோக பயணத்தை முடித்துவிட்டு இறைவனின் நிழலில் இளைப்பாற சென்றுவிட்டார்.