இட்லி கடை படத்தை பார்த்த ஜி.வி.பிரகாஷ் | டாப் 5 பட்டியலில் இடம் பிடிக்கும் சிவகார்த்திகேயன் | ‛தக் லைப்' பட அப்டேட் தந்த த்ரிஷா | ‛பென்ஸ்' படத்திற்கு இசையமைக்கும் இளம் பாடகர் | 4 நாட்களில் ரூ.50 கோடி கிளப்பில் லக்கி பாஸ்கர் | மிக அழகாக நடித்த மீனாட்சி சவுத்ரி! துல்கர் சல்மான் வெளியிட்ட தகவல் | பாலிவுட் என்ட்ரி குறித்து சூர்யா சொன்ன பதில்! | கங்குவா, விடுதலை 2 - எஞ்சிய இரண்டு மாதங்களுக்கு இரண்டே பெரிய படங்கள்தான்? | பிளாஷ்பேக்: மகேந்திரன் படத்தில் நடிக்க மறுத்த ரஜினி | கன்னட இயக்குனர் குரு பிரசாத் தற்கொலை |
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் ஒரு பக்கம் பிஸியாக படங்களில் நடித்து வந்தாலும், மறுபுறம் தொடர்ந்து முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவரது இசையில் தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்த அமரன், லக்கி பாஸ்கர் படங்களின் பாடல்கள் மற்றும் பின்னனி இசை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
மேலும் தனுஷ் இயக்கி, நடித்து வரும் படம் 'இட்லி கடை' மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என இரு படங்களுக்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார். சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் அளித்த பேட்டி ஒன்றில், "இட்லி கடை படம் கிராமத்து பின்னணியில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. 40 நிமிட படத்தை பார்த்தேன். நன்றாக வந்துள்ளது. திருச்சிற்றம்பலம் படம் போன்றே இட்லி கடை படமும் நல்ல எமோசனல் படமாக உருவாகி வருகிறது" என தெரிவித்தார்.