'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவில் டாப் வசூல் நடிகர்கள் என டாப் 5 இடத்தில் சாதனை புரிந்த நடிகர்கள் என நான்கு நடிகர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோரது படங்களுக்குத்தான் பெரும் ஓபனிங் இருக்கும்.
அந்த பெரும் ஓபனிங் என்பது இரண்டு, மூன்று நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலைக் கடப்பது. அப்படிப்பட்ட நடிகர்கள்தான் மேலே குறிப்பிட்ட நான்கு நடிகர்கள். அவர்களைத் தவிர வேறு எந்த நடிகருக்கும் மூன்று நாட்களில் 100 கோடி வசூல் என்பது நடந்ததில்லை.
தற்போது அந்த சாதனையை சிவகார்த்திகேயன் 'அமரன்' படம் மூலம் புரிந்துள்ளார். இன்னும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் மூன்று நாட்களில் 100 கோடி கடந்தது உறுதி என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் டாப் 5 வசூல் நடிகர்கள் பட்டியலில் 5வது இடத்தை நோக்கி முன்னேறி அதில் இடம் பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இந்தப் படம் சிவகார்த்திகேயனின் மூன்றாவது 100 கோடி படம். இதற்கு முன்பு 'டாக்டர், டான்' ஆகிய படங்கள் 100 கோடி வசூலைக் கடந்துள்ளன.